search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நிவாரண முகாம்கள்- கலெக்டர் பேட்டி
    X

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நிவாரண முகாம்கள்- கலெக்டர் பேட்டி

    • வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • நாளை 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியையும் பார்வையிட்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    மேட்டூர் அணையில் இருந்து இன்று 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு நீர்வரத்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வெள்ள நிவாரண முகாம்களை ஏற்படுத்தி வருகிறோம். நாளை 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தங்களது கால்நடைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் ேபாது வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×