என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
  X

  வைகை அணையில் திறக்கப்பட்டு சீறிப்பாய்ந்து வருகிறது.

  வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வைகை அணை நீர் மட்டம் 66.34 அடியாக உள்ளது
  • இன்று காலை முதல் கூடுதலாக 300 கன அடி என 1769 கன அடி வெளியேற்றப்படுகிறது.

  கூடலூர்:

  மாண்டஸ் புயல் தாக்கத்துக்கு பின்பு தமிழகத்தில் மழை அடியோடு குறைந்தது. தற்போது பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

  இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்த்து தண்ணீர் திறப்பை குறைத்த போதிலும் அந்த உயரத்தை எட்ட முடியவில்லை.

  இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 141.65 அடியாக உள்ளது. வரத்து 454 கன அடி. திறப்பு 250 கன அடி. இருப்பு 7572 மி.கன அடி.

  வைகை அணை நீர் மட்டம் 66.34 அடியாக உள்ளது. வரத்து 600 கன அடி. நேற்று 1469 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் கூடுதலாக 300 கன அடி என 1769 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4991 மி.கன அடியாக உள்ளது.

  மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடி. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.34 அடி. வரத்து 31 கன அடி. திறப்பு 27 கன அடி.

  Next Story
  ×