search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் சாரல் மழை முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில்  தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    தேனி மாவட்டத்தில் சாரல் மழை முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக உள்ளது. 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 64.55 அடியாக உள்ளது.

    இதனால் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு நேற்று குறைக்க ப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 842 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக உள்ளது. 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. 884 கன அடி நீர் வருகிறது. 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 433.28 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணை 4.6, தேக்கடி 2.4, சண்முகாநதி அணை 2.2, உத்தமபாளையம் 1.2, போடி 3.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×