என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வருகிற 13-ந்தேதி முதல் ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
  X

  வருகிற 13-ந்தேதி முதல் ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது.
  • இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

  சேலம்:

  சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேசன் கடை பணியில் போதுமான ஊழியர்கள் இல்லை. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

  கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரேசன் கடை, அங்கன்வாடி பணிக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி, ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகள் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், இந்த தேர்வில் லஞ்சம், முறைகேடு ஆகியவை விளையாடியது. இதனால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஊழியர்களை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் ரேசன் கடைகளில் ஆட்கள் பற்றாக்குறையினால் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க அமைப்புகள் இப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தன.

  இதையடுத்து ரேசன் கடைகளில் காலியாக உள்ள ஊழியர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி வருகிற நவம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்களை செய்து அரசாைண வெளியிடப்பட்டுள்ளன.

  இப்பணிகளுக்கு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. அதன் பிறகு நேர்முகத்தேர்வு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் 2-ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

  Next Story
  ×