என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.
சோளிங்கர் சுந்தரேஸ்வரர் ேகாவிலில் கும்பாபிஷேகம்
- ஏராளமானோர் தரிசனம்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சோளிங்கர்
சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ சவுந்தரநாயகி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோ பூஜை கலசபூஜை யாக பூஜை பூர்ணாஹீதி நடைப்பெற்றது.தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கோவில் கோபுர கலசத்திற்கும் மூலவர் சுந்தரேஸ்வரர், சவுந்தரநாயகி சாமிக்கு பூஜை செய்யப்பட்ட கலச புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, தொழிலதிபர் பூபாலன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






