என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாம்பாடி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கிளாம்பாடி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • வருகிற 3-ந் தேதி நடக்கிறது
    • 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அருகே கிளாம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை)காலை நடைபெறுகிறது.

    பின்னர் மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டு அறுசுவை அன்னதானம் நடைபெறும்.

    இதனையடுத்து இரவு 7 மணிக்கு சாமி ஊர்வலம் நடைபெறும்.முன்னதாக செப்டம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை)காலை மகா கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறும்.

    இரவு முத்து மாரியம்மன் நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிளாம்பாடி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×