search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்தவர் உடலை வயல் வழியாக தூக்கிச் சென்ற அவலம்
    X

    இறந்தவர் உடலை வயல் வழியாக தூக்கிச் சென்ற அவலம்

    • சிமெண்டு சாலை மிகவும் சிதிலமடைந்துள்ளதாக புகார்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுதல்

    நெமிலி:

    பனப்பாக்கத்தை அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமம், ஆதி திராவிடர் காலனியில் சுமார் 1,000 பேர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் யாராவது இறந்துவிட்டால் அங்குள்ள ஏரிகால்வாய் மீது போடப்பட்டுள்ள சாலை வழியாக உடலை எடுத்து சென்று அடக்கம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையின் போது ஏரி கால்வாய் மீது போடப்பட்டிருந்த சிமெண்டு சாலை மிகவும் சிதிலமடைந்தது.

    மேலும் சாலையில் செடிகள் முளைத்து புதர் மண்டி கிடக் கிறது. இதனால் இங்கு இறப்ப வர்களின் உடலை எடுத்து செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது உடலை எடுத்து செல்ல வழி இல்லாத தால் வயல்வெளியில் பிணத்தை சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தர முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×