என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
- நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட துணை தலைவர் மோகன், முருகன், ராணி வெங்கடேசன், வசீகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் காஜா, ஏ.கே.சுந்தரமூர்த்தி, சுவேதா பானு, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






