search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    பனப்பாக்கம் அடுத்த குச்சிதோப்பு கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்
    • 156 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சரியான அளவு நெல்களை கொள்முதல் செய்யப்படு கிறதா? அவர்களுக்கான நெல் விலை உடனுக்குடன் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து கலெக்டர் வளர்மதி நேற்று நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

    நெமிலி வட்டம் பனப்பாக்கம் பேரூராட்சி அடுத்த குச்சிதோப்பு பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல் மூட்டைகள் குறித்து கேட்டறிந்தார். மையத்தில் 156 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்.

    இதுவரையில் 103 விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்கி உள்ளனர். 40 கிலோ மூட்டைகள் விதம் எடை போட்டு 6,051 நெல் மூட்டைகள் இதுவரையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். பின்னர் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்து நெல் மூட்டைகள் வழங்கிய பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதில் அதிக நெல் மூட்டைகள் போட்ட விவசாயி மேலப்புலம் புதூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாய வெங்கடேசன் என்பவர் விவரங்களை கேட்டு கலெக்டர் வளர்மதி மேலப்புலம் மோட்டூர் ஊராட்சிக்கு நேரடியாக சென்று வெங்கடேசன் விவசாய நிலத்தை பார்வையிட்டார்.

    அங்கு வந்திருந்த வெங்கடேசன் மகன் ராஜேஷ் என்பவரிடம் அவருடைய விவரங்களை கேட்டறிந்தார்.சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளதை விவசாயி தெரிவித்தார். இவைகளில் கோ 51 ரக நெல் பயிரிடப்பட்டு சுமார் 205 மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளதாக விவசாயி தெரிவித்தார். சரியான முறையில் விவசாயி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளதை கலெக்டர் வளர்மதி உறுதி செய்தார். நெல் விற்பனை செய்தமைக்கான பணம் மூட்டைக்கு ரூ.1,600 வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயி தெரிவித்தார். அதற்கான பணங்கள் வங்கி கணக்கில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நெமிலி வட்டம் நெல்வாய் ஊராட்சி எஸ் கொளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது இம்மையத்தில் 174 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர். அவர்களில் 140 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 14,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி வரையில் நெல்கொள்முதல் பெறப்பட்டவர்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வினில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேவிபிரியா, திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குனர் வேளாண்மை விஸ்வநாதன், வட்டாட்சியர் சுமதி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×