search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குசாவடிகளுக்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும்
    X

    வாக்குசாவடிகளுக்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும்

    • தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • அமைச்சர் காந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், அமுதா, மாவட்ட பொருளாளர் சாரதி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டுவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தல்யொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கழக ஆக்க பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

    டி.பி.ஐ வளாகத்தில் பேராசிரியர் பெருந்தகையின் திருவுருவச்சிலை 19-ந் தேதிதிறக்கப்படவுள்ளது.

    கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம் மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிபடுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு நாளில் திருவுருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தி வட்டக்கிளை, ஊர்கிளை பேரூர்கிளை, ஒன்றியம், நகரம் எங்கும் கொண்டாடிடவும், தலைமைக் கழகம் அறிவிக்கும் பேராசிரியர் நூற்றாண்டு பொதுகூட்டம் நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்கவேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×