என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர்வடகரையில் ராமசாமி கோவில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி
    X

    ராமசாமி கோவிலில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    சாம்பவர்வடகரையில் ராமசாமி கோவில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி

    • கோவிலில் கொடிமரத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும், பின்னர் தேரில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • 10-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் கொடிமரத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும், பின்னர் தேரில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×