என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டு பிரார்த்தனை நடந்த காட்சி.
திசையன்விளை அருகே ராமநவமி கூட்டு பிரார்த்தனை
- உலக நலன், கல்வி, செல்வம், ஆரோக்கியம் குறித்து கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
- அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு மலர்தூவி, விளக்கேற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் இந்து முன்னணி சார்பில் வளர்பிறை ராமநவமி கூட்டு பிராத்தனை நடந்தது.
ரமா சங்கரி ராமரின் மகிமை பற்றி பேசினார். பிரிதா, கஸ்தூரி, மேகலா ஆகியோர் பூஜை நடத்தினர்.
உலக நலன், கல்வி, செல்வம், ஆரோக்கியம் குறித்து கூட்டு பிராத்தனை செய்யப்பட்டது.
அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு மலர்தூவி, விளக்கேற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாவட்ட செயலாளர் விக்னேஷ், திசையன்விளை நகர தலைவர் ஜெயசீலன், செயலாளர் மணிகண்டன், துணைத்தலைவர் கொடி ராஜகோபால், முருகேச ஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்
Next Story






