search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
    X

    குண்டும், குழியுமான வங்காருபுரம் கிராம சாலை.

    அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

    • அபிராமம் அருகே அடிப்படை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
    • கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள வங்காருபுரம் கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    15 ஆண்டுகளுக்கு மேலாக வங்காருபுரம் கிராமத்தில் இருந்து வீரசோழன் செல்லும் பிரதான சாலை 100 மீட்டருக்கு அமைக்க ப்படாமல் எல்லையை காரணம் காட்டி அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

    கிராமத்திற்குள் செல்லும் அந்த சாலையை அபிராமம் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் இந்த எல்லை பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது என்றும், பரமக்குடி ஊராட்சி சேர்ந்த அதிகாரிகள் அபிராமம் எல்லைக்கு உட்பட்டது என்றும் கூறி மக்களை அலைக்கழிக்கின்றனர்.

    ஆனால் சாலை அமைப்ப தற்கான முழு தொகையும் எடுத்துவிட்டு 100 மீட்டர் சாலை அமைக்காமல் விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.

    மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    இரவு நேரங்களில் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரி களுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராமமக்கள் குற்றம் சாட்டினர் .

    ஒரே கிராமத்திற்குள் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    Next Story
    ×