search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்
    X

    கலெக்டர் ஜானிடாம் வர்கீசை கீழக்கரை கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி நிர்வாகிகள் சந்தித்தனர்.

    புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்

    • ஆம்னி பஸ், லாரிகள் நுழைய அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்.
    • இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    கீழக்கரையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் கீழக்கரை கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி சார்பில் மனு அளித்தனர்.

    இது குறித்து அந்த நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி அவைத்தலைவர் சீனா தானா (எ) செய்யது அப்துல் காதர் தலைமையில் குழுவினர் கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து கீழக்க ரையில் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த வி. ஏ. ஓ. அலுவலகம் மற்றும் பீசா பேக்கரி பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து கண்காணிப்பதோடு அதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

    கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஊருக்குள் வரும் கனரக வாகனங்கள், லாரிகள், ஆம்னி பஸ்களை ஊருக்குள் அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.

    திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி செல்லும் தொலைதூர பஸ்கள் கீழக்கரை புதிய பஸ் நிலையம் வரை வந்து செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். விரைவில் கீழக்கரையில் போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

    ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம், துணை தலைவர்கள் உமர் களஞ்சியம், செய்யது அபுதாஹிர், பொருளாளர் ஷபீக், சமூக ஆர்வலர் ஜஹாங்கீர் ஆலிம், ஏர்வாடி தீயணைப்பு நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் கூறு கையில், கலெக்டரின் அறிவுரையின்படி, முதற்கட்டமாக நகராட்சி சேர்மன், அதிகாரிகள், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×