என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
  X

  கீழக்கரையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வை நகராட்சி சேர்மன் செஹானாஸ் ஆபிதா வரவேற்றார்.

  பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
  • கழிவு நீர் கால்வாய் சரி செய்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  கீழக்கரை

  தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி கீழக்கரை நகராட்சியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சேர்மன் செஹானாஸ் ஆபிதா மற்றும் தி.மு.க. கவுன்சிலர்களிடம் நகராட்சி கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தினார்.

  இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுக்கான திட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

  இதன் பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

  ராமநாதபுரம், ராமேசு வரம், கீழக்கரை நகராட்சி உள்ளிட்ட ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளேன். அதில் தெரிவித்த சில திட்டங்களை தொடர்பாக மதிப்பீடு தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி னோம்.

  அதன்படி சேதுக்கரையில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாய்கள் சேதமாகி உள்ளதால் அவற்றை செப்பனிட புதிய திட்டம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய ஆரம்ப நிலையம் கட்டுமானப்பணி, கழிவு நீர் கால்வாய் சரி செய்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  கீழக்கரை நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா வரும் வாரத்தில் திறந்து வைக்கப்படும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் நிறை வேற்றுவது தொடர்பாக பொறியாளர்கள் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிச்சயமாக விரைவில் தொடங்கப்படும். அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், நகர் செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், நகர் மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கவுன்சிலர்கள் முகம்மது காஜா சுஐபு, சர்ப்ராஸ் நவாஸ், முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×