search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது
    X

    தடை காலத்தை முன்னிட்டு ராமேசுவரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள். 

    மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
    • படகுகள் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஆகிய கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாதங்களில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தடை விதித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று 14-ந் தேதி நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் மாதம் 14-ந் தேதி வரை இந்த தடை நீடிக்கும். மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகள் இழுவை படகுகள் ஆகியவை துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூர மிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும்.

    மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள 2 மாதங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைப்பது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். பெரும்பாலான மீனவர்கள் குடும்ப சூழல் கருதி மாற்று வேலைகளுக்கும் செல்வது உண்டு.

    மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன் கடலோரப் பகுதியில் நேற்று மீன் பிடிக்க சென்று கரைக்குத் திரும்பிய ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மீனவர்கள் துறைமுக கடலில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து மீன்பிடி படகுகளில் பயன்படுத்தி வந்த மீன்பிடி சாதனங்களை இறக்கி பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் என ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் மேற்படி மீன்பிடி கலன்களை உபயோ கப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    அதன் பொருட்டு 61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×