என் மலர்
உள்ளூர் செய்திகள்

கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.60 ஆயிரம் மோசடி
- ராமநாதபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.60 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
- இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள டி.இரணியன் வலசை கிராமத்தைச் சேர்ந்த பவித்ரன் (வயது 22) இவர் டிப்ளமோ மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
முகநூல் பக்கத்தில் கோவா துறைமுகத்தில் கப்பலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வ தாகவும், அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தங்களது சுய விவரத்தை அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய பவித்ரன் ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார்.
பிறகு தனது மின்னஞ்சல் முகவரியில் சென்ற பார்த்தபோது குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக தகவல் வந்தது. இந்த தகவலை நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, பேடிஎம் மூலம் 2 தவணைகளில் ரூ.65 ஆயிரம் அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு பவித்ரனை கோவாவிற்கு வரும்படி அழைத்தனர். அங்கு சென்று மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட போது, மேலும் சில காரணங்களை தெரிவித்து கூடுதலாக பணம் செலுத்தினால்தான் வேலை வழங்க முடியும் என்று கூறினர்.
சந்தேமடைந்த பவித்ரன் அவர்களது பாஸ்போர்ட், ஆதாரை ஆய்வு செய்த போது அனைத்தும் போலியானது என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






