என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு
- தொண்டி புதிய பஸ் நிலையத்தில் நடந்த கலைஞர் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் புதிய பஸ் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ.வும், தி.மு,க. மாவட்ட செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்தனர்.
யூனியன் சேர்மன் முகமது முக்தார், தொண்டி பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர், தொண்டி நகர் தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாட்டுப்படகுகளுக்கான படகுப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, மெடல் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலி கான், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், செங்கமடை ரவி, பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.






