search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூர்ந்துபோன கடைமடை கால்வாய்; 100 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
    X

    தூர்ந்துபோன கடைமடை கால்வாய்.

    தூர்ந்துபோன கடைமடை கால்வாய்; 100 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

    • தூர்ந்துபோன கடைமடை கால்வாய்; 100 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • 100 ஏக்கர் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கனேந்தல் யூனியன் கண்மாயை நம்பி அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    சுமார் 100 ஏக்கரில் நெல், மிளகாய் விவசாயம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் வானம் பார்த்த பூமியான அங்கு மழை பெய்தால் மட்டுமே நரியனேந்தல், அரசனூர் கண்மாயில் இருந்து வடக்குனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து வரும். வடக்கநேந்தல் கண்மாய் 4 கடை மடையை கொண்டது. இந்த மடைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.கட்டிய சில வருடங்களி லேயே மடைகள் அனைத்தும் சேதம் அடைந்து முழுவது மாக இடிந்தது.

    முற்றிலும் மடைகள் தூர்ந்து போனதால் சிறிய துளை கூட இல்லாத அள விற்கு மணல் மூடி உள்ளது.இதனால் கண்மாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 வருடங்க ளாக மாவட்ட கலெக்டர் உள்பட சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் மடைகளை பராமரிப்பு செய்து கொடுக்க கோரி பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    விவசாய காலம் தொடங்குவதற்கு முன்பாக 4 மடையையும் பராமரிப்பு செய்து கொடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியும்.கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் மடையை சீரமைக்காததால் இந்த ஆண்டும் விவசாயம் சுமார் 100 ஏக்கர் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    Next Story
    ×