search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை மகா தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
    X

    கீழக்கரை பாலமுருகன் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார்.

    கார்த்திகை மகா தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

    • கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் உள்ள 40 அடி உயர பீடத்தில் எண்ணெய் கொப்பரையில் 50 கிலோ நெய் மற்றும் திரி வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    பாலமுருகன் 3 முறை கோவிலின் வெளிப்பி ரகார வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான இந்து நாடார் உறவின் முறை, இந்து நாடார் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×