என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்த்திகை திருவிழாவில் சொக்கப்பனை எரிப்பு
- கார்த்திகை திருவிழாவில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
- இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில், இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு திருக்கார்த்திகை திருவிழா விமரிசையாக நடந்தது. நேற்று இரவு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி, மயில்
வாகனத்தில் மாடுகள் பூட்டிய தேரில் கோவிலை வலம் வந்தது.
பின்னர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு, சுவாமி முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடார் உறவின்முறை முறைகாரர் பாபுசெல்வக்கனி, அம்பலகாரர் சக்திவேல் மற்றும் டிரஸ்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல் கவுரவ உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவில் முன்பும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






