search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்விக்கடன் பெற வங்கிகள் உதவி செய்ய வேண்டும்-கலெக்டர்
    X

    பயனாளிகளுக்கு வங்கிக்கடன் உதவிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.

    கல்விக்கடன் பெற வங்கிகள் உதவி செய்ய வேண்டும்-கலெக்டர்

    • விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் கல்விக்கடன் பெற வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
    • கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனை வோர், மாணவர்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். முகாமில் 26 பயனாளி களுக்கு ரூ.5 கோடியை 11 லட்சத்து 28ஆயிரத்து 600 ரூபாய்க்கான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    மாணவ-மாணவிகள் கட்டாயம் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் இப்பகுதியில் 12ம் வகுப்பு வரை நன்றாக படிக்கிறார்கள். அதன் பின் பொருளாதார நிலையை மனதில் வைத்து உயர் கல்விக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.பொதுவாக கல்வி ஒன்று தான் நிலையான சொத்து அதை எந்த நிலையிலும் மாணவப் பருவத்தில் தவற விடக்கூடாது.

    வங்கிகள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களை 100 சதவீதம் ஏற்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அவர்கள் கல்விக்கடன் பெற்று பயனடைய உரிய உதவிகள் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளை பொருத்தவரை கடன் வாங்கினால் திரும்பி செலுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மனப்பான்மையை கொண்ட வர்கள். அவர்களின் மனநிலையை மேன்மையடைய செய்யும் வகையில் அவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஷர்மிளா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மையப் பொறி யாளர் பிரதீப், தாட்கோ மேலாளர் தியாகராஜன், தமிழ்நாடு தொழில் முத லீட்டாளர் கழக மேலாளர் ராஜா மற்றும் அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட மலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×