search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குநர் அறிவுறுத்தல்
    X

    மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குநர் அறிவுறுத்தல்

    • இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் என எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
    • மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    உலக இருதய தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் தொடங்கிய ஊர்வலத்தை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் தொடங்கி வைத்தார்.

    பேராசிரியர்கள் ராமதாஸ், லீனா, சரவணன் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். இருதயத்தின்அவசியம், அதனை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளுடன் வழிவிடுமுருகன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக வந்தனர்.டாக்டர் ஹனுமந்தராவ் பேசியதாவது:-

    இருதய நோய் பாதிப்பால் ஆண்டு தோறும் அதிகளவில் இறக்கின்றனர். இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும். மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இயற்கை உணவு வகைகளை சாப்பிட வேண்டும். தினமும் உடற்ப யிற்சி, யோகா, மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×