search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு
    X

    தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு

    • அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சாா்பில் 2014-ம் ஆண்டு ரூ.4.50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அணி வித்தாா்.

    இந்த தங்க கவசமானது குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். பின்னா், குரு பூஜை விழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு டன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு எடுத்து வரப்பட்டு தேவா் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குரு பூஜை விழாயொட்டி வங்கியில் இருந்த தங்கக் கவசத்தை அ.தி.மு.க. பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து வந்தார். பசும்பொன் தேவா் நினை விட பொறுப்பாளா் காந்தி மீனாள் அம்மாள் முன்னிலையில் தேவா் சிலையில் இருந்த வெள்ளி கவசம் கலையப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் நினை வாலய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்கபட்டு அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும்.

    இதையடுத்து நினை விடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×