search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவி அவதி
    X

    மாணவி காயத்ரி.

    மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவி அவதி

    • ஒரு கண் பார்வை பாதித்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவி அவதியடைந்தார்.
    • 40 சதவீதத்திற்கு மேல் உடலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்று முடநீக்க வல்லுநர் கூறினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழராமநதி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. விவசாயி. இவரது மகள் காயத்ரி (வயது 14).

    இவர் நீராவி தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலேயே இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. தனக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் காயத்ரிக்கும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக மாணவியின் தந்தை பாரதிராஜா வேதனை தெரிவித்தார்.

    மகளின் எதிர்காலம் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், தலையிட்டு மாற்றுதிறனாளி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்க வல்லுநர் ஜெய்சங்கர் கூறுகையில், காயத்ரிக்கு ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. இதை 30 சதவீத குறைபாடாக கருத முடியும்.

    மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற ஒருவருக்கு 40 சதவீதத்திற்கு மேல் உடலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அரசு விதிகளை பின்பற்றி சான்றிதழ் வழங்கப்படும். எனவே அரசு விதிகளை மீறி காயத்ரிக்க மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்க இயலாது என்றார்.

    Next Story
    ×