search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்மாய்கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி
    X

    நீரில் மூழ்கி பலியான மாணவனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டப்போது எடுத்த படம்.

    கண்மாய்கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

    • முதுகுளத்தூரில் கண்மாய் கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நிகாஷ்கண்ணன் (வயது14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கண்மாய் கரையில் தனது நண்பர் களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டி ருந்தான். அப்போது அவரது நண்பர்கள் அடித்த பந்து கண்மாய்க்குள் விழுந்தது. இதை எடுப்பதற்காக நிகாஷ்கண்ணன் நீரில் இறங்கி பந்தை எடுக்க முயன்றான்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவன் நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த அவனது நண்பர்கள் நிகாஷ் கண்ணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் நிகாஷ் கண்ணன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோ ரிடம் கூறி சென்றனர்.

    ஆனால் அவனது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றி ருந்ததை அறிந்த அவனது நண்பர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர், தனது மகன் வெகுநேர மாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாண்டி நிகாஷ்கண்ணனின் நண்பர்களிடம் விசாரித்தார்.

    அப்போது நிகாஷ் கண்ணன் அங்குள்ள கண்மாயில் மூழ்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்த பாண்டி முதுகு ளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தீயணைப்பு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகாஷ்கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட சென்ற மாணவன் நீரில் மூழ்கி இறந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×