search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய 101 பேர் பலி
    X

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய 101 பேர் பலி

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய 101 பேர் பலியானார்கள்.
    • தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய கலெக்டர் அறிவுரை கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ஜனவரி முதல் 2022 ஆகஸ்டு வரை 233 வாகன விபத்துக்கள் மூலம் 249 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 98 இருசக்கர வாகன விபத்துகளில் 101 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விபத்துகளில் 99 சதவீதம் இரு சக்கர வாகனத்தில் பயணித்த வர்கள் தலைக்கவசம் அணியாமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக தலைக்க வசம் அணிய வேண்டும். அதுதான் உயிர் கவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதை தவிர்த்து இனி கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.

    இதுபோன்ற விபத்துக்க ளால் உயிரிழந்தவர்களின் நிலை அவர்களோடு முடிவதில்லை. அவர்க ளுக்கு பின்னால் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தாலே ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை பாதுகாப்பாக பயன்படுத்தி பாதுகாப்புடன் செல்லலாம்.

    எனவே அரசின் விதி முறைகளை கடைபிடித்து 4 சக்கர வாகன ஓட்டுபவர்கள் உரிய வேகத்தில் செல்வதும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் செல்வதும், சாலையை கடந்து செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்க ளில் மட்டுமே சாலையை கடப்பது என சாலை விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பான பய ணத்தை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×