என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் குளங்களில் மழைநீர் சேகரிக்க வழிதடங்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மும்முரம்
- மழை காலங்களில் பெருமளவு மழை பெய்தாலும் ஆக்கிரமிப்புகளால் குளங்கள் நிரம்புவதில்லை.
- கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளங்களில் மழைநீரை நிரப்பிட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்:
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல திருகோவில்களையொட்டி பல குளங்கள் உள்ளன. மழை காலங்களில் பெருமளவு மழை பெய்தாலும் ஆக்கிரமிப்புகளால் குளங்கள் நிரம்புவதில்லை. இதனால் தெப்பக்குளங்கள் பலவும் வறண்டு காணப்பட்டன. தற்போது, இதனை தவிர்ப்பதற்காக அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு குளங்களுக்கு மழைநீர் செல்வதற்காக பல வழிதடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளங்களில் மழைநீரை நிரப்பிட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தக்குளம், உலகளந்த பெருமாள் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளம் மற்றும் ரங்கசாமி குளம் போன்ற பகுதிகளில் மழைநீர் செல்வதற்காக புனரமைக்கப்பட்ட வழிதடங்கள் மற்றும் மேட்டு தெரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொறியாளர் கணேசன், மண்டலத்தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.பி. கார்த்திக், சுரேஷ், சுப்பராயன் ஆகியோர் உடன் இருந்தனர்.






