search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மழையை எதிர்நோக்கும் மானாவாரி விவசாயிகள்
    X

    பூப்பூக்கும் நிலையில் உளுந்து செடிகள்.

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மழையை எதிர்நோக்கும் மானாவாரி விவசாயிகள்

    • நல்ல மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்து பூப்பூக்கும் தருவாயில் உள்ளன.
    • தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்து இருந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, சோளம், பருத்தி, கம்பு போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். 50 சதவீதம் விவசாயிகள் உளுந்தையே பயிரிட்டுள்ளனர்.

    விதைத்த நேரத்தில் நல்ல மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்து பூப்பூக்கும் தருவாயில் உள்ளன. தற்போது மழை பெய்தால் தான் பயிர்கள் செழித்து வளர்ந்து பலன் தரும் நிலை இங்கு உள்ளது.

    ஆனால் மழை பெய்யும் சூழ்நிலை இல்லை. 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்து இருந்தது.

    எனவே எப்படியும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, நேற்று குறுக்குச்சாலை, மேல மீனாட்சிபுரம், முரம்மன், சங்கம்பட்டி, சரவணபுரம், ஒட்டநத்தம் போன்ற கிராமங்களில் பயிர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு மழை பெய்தது.

    மற்ற பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளோம்.நாங்கள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றாம் என்றனர்.

    Next Story
    ×