search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே கண்மாய் உடைந்து விளை நிலங்களுக்குள் புகுந்த மழைநீர் பயிர்கள் சேதம்
    X

    உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் புகுந்த மழைநீர்.

    தேவதானப்பட்டி அருகே கண்மாய் உடைந்து விளை நிலங்களுக்குள் புகுந்த மழைநீர் பயிர்கள் சேதம்

    • கரை பலப்படுத்தப்படாததால் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
    • ராஜவாய்க்காலில் ஏற்பட்டுள்ள உைடப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வெண்டிக்காய், வாழை, பருத்தி, கத்திரி உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வேட்டுவன் கண்மாய், ஒட்டகுளம் கண்மாய் மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய்க்கு ராஜவாய்க்காலில் இருந்து நீர் கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜவாய்க்கால் மூலம் கண்மாய்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முறையாக கரை பலப்படுத்தப்படாததால் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, பருத்தி, கத்தரிக்காய் உள்ளிட்டவிளை பொருட்கள் சேதமாகியது. மேலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சேதாரம் அதிகமானதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தங்களுக்கு நஷ்டஈடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ராஜவாய்க்காலில் ஏற்பட்டுள்ள உைடப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×