என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

- ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது.
- 136 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. பதவி பெற்றதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்லை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது. அதனால் 136 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றார். இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு, மாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மாவட்ட வட்டார கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.