என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
- அறந்தாங்கி அருகே10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
- காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் விபரீத முடிவு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆதித்தன்பட்டி பகு தியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகள் அனுஸ்ரீ (வயது15).
இவர் பிள்ளைவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10- வகுப்பு பயின்று வந் தார். தந்தை முருகேசன் விபத்தில் உயிரிழந்ததை யடுத்து தாயின் அறவணை ப்பில் அனுஸ்ரீ வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் கணித பாடத்தில் அனுஸ்ரீ குறைந்த மதி ப்பெண் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் யாருடனும் ேபசாமல் சோகமாக காண ப்பட்ட மாணவியிடம், டியு சன் சென்டருக்கு சென்று படித்து அடுத்த பரீட்சையில் தேர்ச்சி பெற லாம் என அவரது தாய் ஆறுதல் கூறி யுள்ளனர்.
ஆனால் மாணவி தான் தேர்வில் தோல்வி அடை ந்ததை எண்ணி மன வே தனை அடைந்து வீட்டிற்குள் சென்று வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடல் பிரேத பரிசோத னைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த 10-ம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்ப வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.






