என் மலர்
புதுக்கோட்டை
கீரனூர்:
கீரனூர் கீழ காந்தி நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது36). இவர் கொத்தனார். மனைவி ரேவதி, இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ரேவதிக்கும் கோபிநாத்திற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த கோபிநாத் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த கோபிநாத்தை கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், சமூக அமைப்பினர், பல்வேறு கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நெடுவாசலுக்கு நேரிடையாக சென்று பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் மக்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி செந்தில்நாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரும் நேரிடையாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் "அதிமுக அரசுதான் மீத்தேன் திட்டத்தை எதிர்த்தது. அதிமுக அரசு எப்போதும் விவசாயிகளின் நலன் காப்பதில்தான் முனைப்பு காட்டி வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு செயல்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் தமிழக அரசு மவுனம் காக்கவில்லை. பிரதமரை சந்திக்கும்போது ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து தமிழக முதல்வர் முறையிடுவார்" என்றார்.

அமைச்சருடன் உடன் சென்ற அதிமுக எம்.பி செந்தில்நாதன் மக்களின் எண்ணத்தை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பேன்
என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து பேசுவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.
மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னர் ஓஎன்ஜிசி அமைத்துள்ள ஆழ்துளைக் கிணற்றை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், சமூக அமைப்பினர் , பல்வேறு கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நெடுவாசலில் எண்ணை படிமம் உள்ள இடத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகள், பொது மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வருகிற 27-ந்தேதி தமிழக முதல்வர் , பிரதமரை சந்தித்து பேச போவதாக கூறியுள்ளார். அப்போது பிரதான கோரிக்கையாக இத்திட்டத்தை கைவிடுவது குறித்து வலியுறுத்த வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், சமூக அமைப்பினர், பல்வேறு கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நெடுவாசலுக்கு நேரிடையாக சென்று பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வரதராஜன் ஆகியோர் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடா விட்டால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
நேற்று நெடுவாசலில் எண்ணை படிமம் உள்ள இடத்தை பார்வையிட வந்த பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதித்துள்ள திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மார்ச் 3-ந்தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
இதனிடையே இன்று காலை பள்ளி-கல்லூரி மாணவர்கள் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தினர். மேலும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் ஜான் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நெடுவாசலில் எரிவாயு சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில், புதுக்கோட்டை சப்-கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அத்திட்டம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வருவாய்த்துறையினரிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது கறம்பக்குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நெடுவாசலுக்கு வரும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று சப்-கலெக்டர் ஆய்வு செய்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அப்பகுதி விவசாயிகள் கூறும் போது, இது போன்ற திட்டம் டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்த வந்த போது தான் அதன் பாதிப்பு எல்லோருக்கும் தெரிந்தது. அந்த திட்டத்திற்கு எதிராக நாங்களும் போராடினோம். அப்படியான திட்டம் எங்கள் ஊருக்கும் வரும் போது எங்களுக்கு ரொம்ப அச்சமாக உள்ளது.
இந்த திட்டத்தால் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நிலை உருவாகிறது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த விடாதவாறு போராட்டங்கள் நடத்துவோம். நாளை 26-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றனர்.
புதுக்கோட்டை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கான வேலை நாட்களை, 100 நாட்களில் இருந்து 150 நாளாக உயர்த்தி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு:-
மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கான வேலை நாட்களை 100-ல் இருந்து 150 நாளாக உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவைவிட 62 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை நாட்களை 100-ல் இருந்து 150 நாளாக உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
அதன்படி, வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கப்பட உள்ளது. ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டை பணிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் போன்ற நீராதாரத்தை அதிகரிக்கும் வகையிலும், பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே 100 நாட்கள் பணி முடித்த புதுக்கோட்டை மாவட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கூடுதலாக 50 நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஓரிடத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயு மற்றொரு இடத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்படும் இந்த எரிவாயு திட்டத்தால் அந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் அழியும் என்ற தகவல் விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் விளைச்சல் காணும் பழ வகைகள், காட்டு தாவரங்கள், வாழை போன்ற பயிர்கள் அழிந்துவிடும் நிலையும் உருவாகி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து அந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வடகாடு, கோட்டைகாடு, கருக்காகுறிச்சி, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆய்வுப்பணி மேற்கொள்ள வரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி கிராமமக்கள் நெடுவாசல் கிராமத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெடுவாசல் பகுதிக்கு வந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும், அதில் அந்த நிறுவனத்தால் போடப்பட்ட ராட்சத ஆழ்குழாய் கிணற்றையும் பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களின் நிலை மற்றும் போராட்டம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரி பாசன பகுதிகளில் விளை நிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திட முயற்சித்தது. அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினாலும், விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரின் போராட்டத்தினாலும் தமிழக அரசு அத்திட்டத்திற்கு தடை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பசுமையான பகுதியான நெடுவாசல் கிராமத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் எனும் பெயர் மாற்றி இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முடங்கிவிடும். மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழக அரசு மீத்தேன் திட்டத்தை கைவிட எடுத்த நடவடிக்கையை போல் இத்திட்டத்தையும் தடுக்க முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிடாவிட்டால் இப்பகுதி மக்களை ஒன்றிணைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் . எனவே அதனை செயல்படுத்தக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்கனவே மீத்தேன் வாயு எடுக்க முயற்சி நடந்தது. தற்போது புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு தடை விதிக்கும் வகையில் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் அரசியல் கட்சிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். மக்கள் மனநிலையை புரிந்து மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இது பற்றி நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ராஜா குரல் கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை திலகர் திடலில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் மெய்யநாதன், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூரில் தாசில்தார் அலு வலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் தலைமை தாங்கினார். தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் கே.சி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் சட்டத்துறை இணை செயலாளர் மணி ராஜ், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், கருப்பண்ணன், மகேஸ்வரி சுப்பிரமணியம், சார்பு அணி பொறுப்பாளர் பரணிமணி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணி, தொங்கு நாடு தேசிய கட்சி வர்த்தக அணி மாநில செயலாளர் மிசா சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான சிவசங்கர் தலைமை தாங்கினார். இதில் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். உண்ணாவிரதம் நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும். எனவே அதனை செயல்படுத்தக் கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நெடுவாசல் வருவாய்த்துறை அதிகாரிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பகுதிகளை பார்வையிட சென்றபோது அவர்களை அதிகாரிகள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வருகிற 26-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமை மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே சட்டக்கல்லூரி மாணவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும் போது, புதுக்கோட்டை நெடுவாசலில் செயல்படுத்த போவதாக அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இதற்காக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட மாணவர்கள், அமைப்புகளை ஒன்று திரட்டி வருகிறோம் என்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வயல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் .எனவே அதனை செயல் படுத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நெடுவாசல் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பகுதிகளை பார்வையிட சென்றனர். இதையறிந்த பொதுமக்கள், விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமை மீட்புக் குழுவினர் அறிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் அனுமதி கேட்க , புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அக்குழுவை சேர்ந்த 3 பேரை போலீஸ் நிலையத்திற்குள்ளேயே நீண்ட நேரம் வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர்மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது உள்ள மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி வருகிறது. மாநில அரசு சிறுபான்மையினரின் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை முறையாக வழங்குவதில்லை.
மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மையினரின் மத விவகாரத்தில் தலையிடுகிறது. முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு முயல்கிறது. இதனை முற்றிலும் கைவிட வேண்டும். மத சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு நீதிமன்றத்திற்கோ, அரசுக்கோ அதிகாரம் கிடையாது.
தமிழக சட்டமன்றத்தில் காமராஜர், அண்ணா, ராஜாஜி, கருணாநிதி உள்ளிட்ட அறிஞர்கள் விவாதம் செய்திருக்கிறார்கள். சட்டமன்றம் விவாத மன்றமாக இருக்க வேண்டும். விதண்டாவாதம் செய்யும் மன்றமாக இருக்கக்கூடாது.
முதல்-அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வந்தபோது அவரின் காரை சோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? இது எதிர்கட்சி தலைவரை அவமானப்படுத்தும் செயல். அப்போதே ஆளும் கட்சி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது.
பின்னர் சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சட்டை கிழிப்பு, எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது கொடுமையான நிகழ்ச்சி. தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயக படுகொலை. சட்டசபைக்குள் யாரும் சாதி பெயரை சொல்லி குறிப்பிடாமல் இருக்கும் போது சபாநாயகர் தனபால் ஜாதி ரீதியாக பேசியிருப்பது ஏற்புடையது அல்ல.
சட்டமன்றத்தில் சாதி ரீதியான செயலுக்கு அனுமதி கிடையாது. சபாநாயகரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் தைலமர காடுகள் உள்ளன. இந்த தைலமரக்காட்டு பகுதி கிழக்கு பகுதி, மேற்கு பகுதி என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒரு வனவர் வனத்துறை சார்பில் நியமிக்கப்பட்டு, காலை மற்றும் மாலை வேளைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் மேற்கு பகுதி வனவர் செந்தில்மணி தைலமரக்காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருக்கோகர்ணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த வாலிபர் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், அவரது உடலில் சரமாரியாக வெட்டு காயங்கள் இருந்ததால் அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட வாலிபர் ரோஸ் கலர் சட்டையும், நீல கலர் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். மேலும் அவரது தலையில் 3 இடங்களில் வெட்டுக்காயங்களும், தோள் பட்டையில் வெட்டுக்காயமும், மேலும் அவரது 2 விரல்களும் துண்டிக்கப்பட்டு இருந்தன.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மார்சல் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
மோப்பநாய் கொலை செய்யப்பட்ட வாலிபர் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த படி பாலன்நகர் வரை ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அப்போது பிணத்தின் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அந்த செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் வெட்டி கொலை செய்யப்பட்டவர் மதுரை மாவட்டம் பறவை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கனகராஜ்(வயது26) என்று தெரிய வந்தது. கனகராஜ் எப்படி இங்கு வந்தார் என்று தெரியவில்லை. அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






