என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், அரியலூரில் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை திலகர் திடலில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் மெய்யநாதன், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூரில் தாசில்தார் அலு வலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் தலைமை தாங்கினார். தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் கே.சி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் சட்டத்துறை இணை செயலாளர் மணி ராஜ், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், கருப்பண்ணன், மகேஸ்வரி சுப்பிரமணியம், சார்பு அணி பொறுப்பாளர் பரணிமணி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணி, தொங்கு நாடு தேசிய கட்சி வர்த்தக அணி மாநில செயலாளர் மிசா சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான சிவசங்கர் தலைமை தாங்கினார். இதில் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். உண்ணாவிரதம் நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






