என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்: வாசன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என நெடுவாசலில் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், சமூக அமைப்பினர் , பல்வேறு கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நெடுவாசலில் எண்ணை படிமம் உள்ள இடத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகள், பொது மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வருகிற 27-ந்தேதி தமிழக முதல்வர் , பிரதமரை சந்தித்து பேச போவதாக கூறியுள்ளார். அப்போது பிரதான கோரிக்கையாக இத்திட்டத்தை கைவிடுவது குறித்து வலியுறுத்த வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story