என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது
    X

    மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது

    • மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • டிராக்டர் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டி மயிலிகுளத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலிகுளத்தில் ஹெவி கிட்டாச்சி மூலம் டிராக்டரில் மணல் கடத்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் அங்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் ஓடிவிட்டனர். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், பள்ளத்திவிடுதியை சேர்ந்த ஓட்டுநர் சரவணன் என்கிற ராஜா (வயது 40) என்பவரை கைது செய்தனர்

    Next Story
    ×