என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி
- புதுக்கோட்டையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- பேரணியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல அமைப்பின்சார்பில் உலக மக்கள்தொகை தினத்தினை முன்னிட்டு செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கலெக்டர்ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியானது பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது.
முன்னதாக அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் உலக மக்கள் தொகை நாள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரி சு மற்றும் சான்றிதழ்களையும், மாவட்ட குடும்ப நலத்துறையில் 20 வருடங்கள் விபத்தின்றி வாகனங்கள் இயக்கியமைக்காக தமிழக அரசால் ஊர்தி ஓட்டுநர்கள் எஸ்.செந்தில்குமார், தெ.சிங்காரவேலு ஆகியோர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிக்ழ்ச்சியில் இணைஇயக்குனர் இரவி, மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், துணை இயக்குநர்கள்கோமதி, ராம்கணேஷ், சிவகாமி சிவசங்கர், மக்கள் கல்வி தகவல் அலுவலர் சேகர் , வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






