என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

    • விராலிமலை ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • வெயிலின் தாக்கம் உணராமல் படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டது

    விராலிமலை,

    விராலிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் வருடம் தோறும் ஆடி கார்த்திகை நாள் அன்று மலை மேல் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் நேற்று காலை மலைமேல் உள்ள முருகனுக்கு வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை உணராமல் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டது.மேலும் உள்ளுர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முருகன் கோவில் மலைமீது ஏறி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    Next Story
    ×