என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை சீரமைக்கும் பணிகள் துவக்கம்
- திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை சீரமைக்கும் பணிகள் துவக்கம்
- அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைக்கும் பணிகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.மேலாத்தூர் ஊராட்சியில் ரூ.24.53 லட்சம் மதிப்பீட்டிலும், கல்லாலங்குடி ஊராட்சியில் ரூ. 18.97 லட்சம் மதிப்பீட்டிலும். கரும்பிரான் கோட்டை ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதே போல் பாத்தம்பட்டி ஊராட்சியில் ரூ. 34.57 லட்சம் மதிப்பீட்டிலும். குப்பகுடி ஆதிதிராவிடர் காலணி பகுதியில் ரூ. 43. 88 லட்சம் மதிப்பீட்டிலும் மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.கீழையூர் பகுதியில் ரூ.27.41 லட்சம் மதிப்பீட்டிலும். கலிங்கிப்பட்டியில் ரூ.28.63 லட்சம் மதிப்பீட்டிலும் .களங்குடி ஊராட்சியில் ரூ.22.7 லட்சம் மதிப்பீட்டிலும். குளவாய்ப்பட்டியில் ரூ.36.17 லட்சம் மதிப்பீட்டிலும். சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் கவிதபிரியா, திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, ஒன்றிய அலுவலர்கள் ஆயிஷா ராணி, கோகுலகிருஷ்ணன், பொறியாளர் யோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






