என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை தலைமை செயலகத்தில் லோகோவினை வெளியிட்டார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்து, லோகவினை வெளியிட்டார், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார், புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சேது.கார்த்திகேயன், மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் செழியன்,மதியழகன் மணிமாறன், அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஹரிகிருஷ்ணன், ஆகாஷ், மணிகண்டன் மாரிமுத்து, சித்தார்த், மணிகண்டன் பிரவீன்,வனிதா, அகிலா,பிரீத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






