என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குழந்தை திருமணங்களை தடுத்தலில் சிறப்பான பங்ளிப்பை வழங்குகிறது-தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் பாராட்டு
- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குழந்தை திருமணங்களை தடுத்தலில் சிறப்பான பங்ளிப்பை வழங்குகிறது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் பாராட்டினார்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் 21 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளியின் வகுப்பறை கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் குறித்தும், கழிப்பறை வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது குறித்தும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இப்பள்ளியில் கழிப்பறை வசதி தேவைப்படுவதை அறிந்து, மாவட்ட கலெக்டர் 2 நாட்களுக்குள் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்ததற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், பள்ளியின் மேம்பாட்டு வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் 21 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஒரு குழந்தை தொழிலாளர்கள் கூட இல்லாத நிலையை உருவாக்கும்வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பேருந்து நிலையங்கள், சாலை சிக்னல்களில் குழந்தை தொழிலாளர்கள் குறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குற்றங்களை தடுத்தல், போஸ்கோ சட்டம், குழந்தை திருமணங்களை தடுத்தல் போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தை குழந்தை களின் நட்பு மாவட்டமாக முன்னெடுக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மேம்பாடு அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.மேலும் கூர்நோக்கு இல்லங்களில் சிறார்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது குறைக்கப்படும். குழந்தைகளே தாங்களாக முன்வந்து தங்களுக்கு ஏற்படும் குற்றங்களை புகார் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்தும் பொழுது அவர்களின் மீதான குற்றங்கள் குறையும் என்றார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், புதுக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேலுச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






