என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரவி எடுப்பு விழா
    X

    புரவி எடுப்பு விழா

    • அறந்தாங்கி அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • 10 கிலோ மீட்டர் தூரம் மேளதாள முழக்கத்துடன் மண் குதிரைகளை சுமந்து வந்த பொதுமக்கள்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேங்கூர் பெரியாண்டவர் அய்யனார் ஆலயத்தில் ஆண்டுதோறும் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். நல்ல மழை பெய்து உலக மக்கள் செழிப்பாக வாழ வேண்டி பக்தர்கள் 10 நாட்கள் விரதமிருந்து வழிபாட்டில் ஈடுபடுவர். இந்தாண்டு நடைபெற்ற விழாவில் 284 மண்குதிரைகள் 600 மதளைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அறந்தாங்கி சோதனைச் சாவடி அருகே உள்ள வேளார் தெருவில் மண்குதிரைகள் மற்றும் மதளைகள் செய்யப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக தோளில் சுமந்து சென்றனர். அறந்தாங்கியிலிருந்து வேங்கூர் பெரியாண்டவர் அய்யனார் ஆலயம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் மேளதாள முழக்கத்துடன் புரவி எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது. புரவி எடுப்பு விழாவில் பக்தர்கள் களைப்படையாமல் இருக்க வழி நெடுகிலும் தண்ணீர் , குளிர்பானங்கள் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கினர்.

    Next Story
    ×