என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து இன்றி பேருந்துகள் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு
    X

    விபத்து இன்றி பேருந்துகள் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு

    • விபத்து இன்றி பேருந்துகள் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது
    • 20 ஓட்டுனர்களுக்கு கலெக்டர் கவிதா ராமு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை மண்டலத்தில், விபத்துகள் இன்றி பேருந்துகளை இயக்கிய 20 ஓட்டுனர்களை பாராட்டி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இவ்விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் ப.ஜெய்சங்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சசிகுமார், நல்லதம்பி, சு.நடராஜன், போலீஸ் டிஎஸ்பி முருகராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×