என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் சர்வதேச புலிகள் தினம்
- கந்தர்வகோட்டையில் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்பு
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அவரம்பட்டியில் சர்வதேச புலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கந்தர்வக்கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்தார்.வட்டாரச் செயலாளர் சின்னராஜா அனைவரையும் வரவேற்றார். மேலும் புதுக்கோட்டையில் நடைபெறும் 6வது புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் மகேஸ்வரி , சங்கீதா, கிருஷ்ணவேணி, வேம்பரசி, வைஷ்ணவி, கிருத்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






