என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது
    • மேலும் விபரங்களுக்கு 04322 222187 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்லபல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதலமைச்சரால் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஐவர்ஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா ரோடு, பெரியமேடு, சென்னை-600 003 எனும் முகவரிக்கு தபால் மூலமாக எதிர்வரும் 28.06.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04322 222187 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்படி விருது பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரதீர செயல் புரிந்த பெண்கள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×