search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கோட்ைட நோக்கி பேரணி
    X

    அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கோட்ைட நோக்கி பேரணி

    சென்னையில் 28-ந் தேதி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கோட்ைட நோக்கி பேரணி

    கந்தர்வ கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் வட்டார அளவிலான ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

    ஜாக்டோ ஜியோவின் ஒன்றிய ஒருங்கிணைப்பா ளர்கள், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் வட்டாரச் செயலா ளர் சண்முகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலா ளர் முத்துக்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொருளாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் தெட்சண மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் சேகர் அனைவரையும் வரவேற் றார். கந்தரவக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஒன்றிய தலைவர் ரவி, செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, மகளிர் அணி செயலாளர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    வருகிற 24-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்க ளில் மறியல் போராட்டமும், டிசம்பர் 28-ந் தேதி சென்னை யில் லட்சக்கணக் கான அரசு ஊழியர், ஆசிரி யர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போரா ட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்ச ரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை ஒன்றி யத்தின் சார்பில் அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    Next Story
    ×