என் மலர்
உள்ளூர் செய்திகள்

யோகா இலவச பயிற்சி பட்டறை
- புதுக்கோட்டை கறம்பக்குடியில இலவச யோகா பயிற்சி
- அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் பங்கேற்பு
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பல்லவராயர் மணி மண்டபக்குழு மற்றும் பன்னீர் தேவர் அறக்கட்டளை இணைந்து யோகா பயிற்சி பட்டறையை கறம்பக்குடியில் தனியார் மண்டபத்தில் துவங்கினர். நிகழ்ச்சியை பன்னீர் தேவர் அறக்கட்டளையின் செயலாளர் ப கருப்பையா துவங்கி வைத்தார்.. இதில் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் சுந்தர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு யோகாவின் பயிற்சி முறை அதன் வகைப்பாடு மற்றும் செயல் விளக்கத்தை எடுத்து கூறினார். மேலும் திருமூலர் எழுதிய திருமந்திர நூலில் உள்ள யோகாவின் வழிமுறை மற்றும் நேர கால அளவுகள் படி பயிற்சியை செய்து காண்பித்து விளக்கினார். இந்த பயிற்சியின் மூலம் மனிதர்களுக்கு உண்டாகும் சுவாசக் கோளாறு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பயிற்சியையும் செய்து காண்பித்தார்.முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேனிநாதன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்க செயலாளர் இரா முத்தையா, ஆசிரியர் அப்பு, தட்சிணாமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் திருமாறன் நன்றி கூறினார்.






