என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்துவட்டி கொடுமை- பெண்  தற்கொலை முயற்சி
    X

    கந்துவட்டி கொடுமை- பெண் தற்கொலை முயற்சி

    • கந்துவட்டி கொடுமைக்கு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • 6 பேர் மீது வழக்கு பதிவு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜா மகள் அனிதாராஜ்(வயது33). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவர் தான் நடத்தி வரும் கடைக்கு வியாபாரத்திற்காக சின்னப்பா நகர் 2ம் வீதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி இந்திராவிடம்(53) ரூ.1லட்சம் கடன் வாங்கியுள்ளர்.

    இதற்காக வட்டியை அவர் செலுத்தி வந்துள்ளார். அசோக் நகரை சேர்ந்த ராதா, காமராஜபுரத்தை சேர்ந்த சித்ரா ஆகியோர் வட்டியை வசூல் செய்துள்ளனர். அனிதாராஜ் வாங்கி ஒரு லட்சத்திற்கு 6லட்சம் வரை கட்டியுள்ளார். இருப்பினும் அசலும் வட்டியும் சேர்த்து மீண்டும் 3லட்சம் தரவேண்டும் என இந்திரா, தனது மகன்கள் மணிகண்டன், பூ பாண்டி, உடன் சென்று அனிதா ராஜை தகாத வார்தைகள் சொல்லி திட்டி மிரட்டியுள்ளனர்.

    இதனால் அனிதாரஜ் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை புதுக்கோட்டை தனியா ர் மருத்துவமனையில்த்து சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்நிலையில் அவர் கொடுத்த புகாரின்பேரில் கனேஷ்நகர் போலிசர் இந்திரா உட்பட ஆறு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×