என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி
- வக்கீல்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயன்றுள்ளார்
- தூக்க மாத்திரை சாப்பிட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கு ம் குடும்ப தகராறு ஏற்பட்டது.இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கியராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன்பேரில்போரட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில் ஆரோக்கியராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






