என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
    X

    கந்தர்வகோட்டையில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

    • கந்தர்வகோட்டையில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பேரணியை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மூலம் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகில் தொடங்கிய பேரணியை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது. பேரணியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், உடல் பாதிப்புகள், குடும்ப சீரழிவுகள் மற்றும் தீமைகள் குறித்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் சென்றனர்.



    Next Story
    ×